இதை ஏன் தோனி செய்யக் கூடாது? கவுதம் காம்பீர் விருப்பம்!!

31 August 2020, 10:21 pm
Dhoni Gambir- Updatenews360
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் ரெய்னா இடத்தில் தோனி களமிறங்கி விளையாட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி எப்போது நடைபெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா முடக்கத்தால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில் இருந்த போது, திடீரென ஐ.பி.எல் போட்டியில் இருந்து ரெய்னா விலகியதால் அடுத்தடுத்த சோதனைகள் ஏற்பட்டது. அவர் தனிப்பட்ட காரணங்களால் அணியில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், நிர்வாகத்தின் இடையே கருத்து மோதல் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அணியில் இருந்து ரெய்னா விலகியதால் அந்த இடத்தை தோனி பூர்த்தி செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக விளையாட தோனி, தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0