சென்னை ரசிகர்களுக்காக இதை செய்த பிறகே ஐபிஎல்லில் இருந்து ஓய்வு : தோனியின் அறிவிப்பை விசில் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்…!!!

Author: Babu Lakshmanan
6 October 2021, 12:06 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை ஒரு அணிக்கு கேப்டனமாக இருந்து வருபவர் தோனி. இவர் கடந்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பிறகு, ஓய்வை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்த ஆண்டோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ரசிகர்களுக்கு தோனி மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது, இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இணையவழியாக ரசிகர்களுடன் தோனி உரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- நாங்கள் சென்னைக்கு வருவோம். அங்கு என்னுடைய கடைசி ஆட்டத்தை விளையாடுவேன். என்னுடைய கடைசி ஆட்டத்தில் நான் சென்னை அணிக்காக விளையாடுவதை ரசிகர்கள் நேரில் காணலாம். எனக்கு அவர்கள் பிரியா விடை கொடுக்க வேண்டும். ஆக.,15ம் தேதி சிறந்த நாள் என்பதால், அந்த நாளில் நான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தேன், எனக் கூறினார்.

இதன்மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 496

0

0