“தோனி இருக்க பயமேன்“ : சி.எஸ்.கே CEO நம்பிக்கை!!

7 September 2020, 11:44 am
CSK ceo - updatenews360
Quick Share

தோனி இருக்கும் போது எங்கள் அணி பற்றி எந்த பயமும் இல்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல் போட்டி வரும் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் போட்டியே விறுவிறுப்பாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெறுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆனால் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. சொந்த காரணங்களுக்காக சிஎஸ்கே வீரர்கள் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகியுள்ளனர்.

அதேபோல சிஎஸ்கே வீரர்கள் உட்பட 13 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் சிஎஸ்கே அணி இன்னும் பயிற்சி ஆட்டத்தை துவங்கவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கேவின் நிலைமை குறித்து பேசியுள்ள அணியின் சிஇஓ காசி விஸ்வநாத், சிஎஸ்கே வீரர்கள் துடிப்புடன் இருக்கிறார்கள், எந்த நேரத்திலும் விளையாட அவர்கள் தயாராக உள்ளனர். தோனி கேப்டனாக உள்ளதால் எங்களுக்கு சிஎஸ்கே பற்றி எந்த கவலையும் இல்லை, தோனி இருப்பதால் பயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பயிற்சி ஆட்டத்தை துவங்கியுள்ளோம், இந்த ஆண்டு சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும், அதே போல துபாய் முழுவதும் மஞ்சள் நிற ஜுரம் பள்ளிக்கொள்ளும், அதே போல சிஎஸ்கே ரசிகர்கள் இந்த வருடமும் தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள் என தெரிவித்தார். இனி என்ன “சிஎஸ்கே அணிக்கு விசில் போடு“.

Views: - 0

0

0