பேட்டும்… அடுத்தவன் பொண்டாட்டியும் ஒன்னு… கமெண்ட்ரியின் போது சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்..!!

2 July 2021, 2:47 pm
dinesh karthik - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆங்கில தொலைக்காட்சியின் வர்ணனையாளராக பொறுப்பேற்றார்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றினார்.

அப்போது, பேட் தொடர்பாக சக வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, தினேஷ் கார்த்திக் செய்த ஒப்பீடு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு அவர்களின் பேட் பிடிக்காது. ஆனால், பிறருடைய பேட்களை ரொம்பவும் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போன்றது, எப்போதும் நன்றாக இருக்கும், எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 452

0

0