இந்தியா – இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்!

22 February 2021, 8:51 pm
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகச் செயல்படவுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்குப் பின் இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் கடந்த 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்பு இடம் கிடைக்காமல் தவித்து வரும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகச் செயல்பட உள்ளார்.

இதை இங்கிலாந்தில் இந்த தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஓய்வை அறிவிக்காத போது வர்ணனையாளராகச் செயல்பட்ட வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் இணைய உள்ளார். முன்னதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்காத போது வர்ணனையாளராகச் செயல்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கார்த்திக்குடன் இணைந்து வர்ணனையாளர் பணியில் ஈடுபடுவார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களைத் தவிர ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பிரதான வர்ணனையாளர்கள் டேவிட், நாசர் உசேன், ரெயின்போ, மிச்செல் ஆகியோர் இந்த வர்ணனையாளர்கள் பட்டியலில் உள்ளனர். இந்த இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்தியர் தினேஷ் கார்த்திக் மட்டும்தான். 35 வயதான தினேஷ் கார்த்திக் தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழ்நாடு அணியை வழி நடத்தி வருகிறார்.

இந்த லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரின் போட்டிகள் வரும் மார்ச் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாடு அணி பிப்ரவரி 28ஆம் தேதி தனது கடைசி போட்டியில் பங்கேற்கிறது. இந்த தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் வரும் மார்ச் 1ஆம் தேதி துவங்க உள்ளது. இதன் ஃபைனல் போட்டி வரும் மார்ச் 14ஆம் தேதி நடக்க உள்ளது. ஒருவேளை தமிழ்நாடு அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகத் தனது பணியைத் துவங்குவதற்குத் தாமதம் ஏற்படலாம்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் மார்ச் 12ம் தேதி துவங்குகிறது. அதேபோல ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 23ஆம் தேதி துவங்குகிறது. தினேஷ் கார்த்திக் கடைசியாக இந்திய அணிக்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். அதன் பின்பு இந்திய அணியின் தற்போது வரை இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Views: - 1

0

0

Leave a Reply