பெண் நடுவரால் அமெரிக்க ஓபனில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம்..! டுவிட்டரில் புலம்பல்..! (வீடியோ)

7 September 2020, 1:09 pm
novak-djokovic - updatenews360
Quick Share

ரபேல் நடால், ரோஜர் பெடரர் உள்ளிட்ட முன்னனி வீரர்களின்றி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், அனுபவமிக்கவரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் மட்டுமே கலந்து கொண்டார் என்பதால், இந்த முறை அவர்தான் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கரீனோ பஸ்டோவை எதிர்த்து விளையாடினார் ஜோகோவிச். இதில், டஃப் கொடுத்த கரீனோவிடம் 6-5 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி இழந்தார். இதனால், கடுப்பான ஜோகோவிச் பந்தை வேகமாக களத்திற்கு வெளியே ஓங்கி அடித்தார். அவர் அடித்த பந்து, லைன் நடுவராக இருந்த பெண்ணின் முகத்தில் பட்டதில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து, வலியால் அலறினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜோகோவிச், மன்னிப்பு கேட்டதுடன், அவரை ஆசுவாசப்படுத்தினார்.

ஆனால், இந்த விவகாரம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் தலைமை நடுவரின் பார்வைக்கு சென்றது. அப்போது, ஜோகோவிச்சை இந்த தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்ததுடன், இந்தப் போட்டியில் கரீனோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஜோகோவிச் தனது கிட் பேக்கை எடுத்துக் கொண்டு, நிம்மதியற்ற நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

மேலும், “தான் இந்த செயலை வேண்டுமென்ற செய்யவில்லை. பாதிக்கப்பட்ட நடுவர் மற்றும் அமெரிக்க ஓபன் நிர்வாகத்திடம் மன்னிப்பு கோருகிறேன்,” என ஜோகோவிச் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தத் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோரின் சாதனையை முறியடிப்பதில் ஜோகோவிச்சிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Views: - 8

0

0