நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச் : 2023 முதலாவது ஆஸி., ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 6:32 pm
Djokovic - Updatenews360
Quick Share

ஆண்டின் முதலாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர் .

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-3, 7-6 , 7-6 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இது ஜோகோவிச் வென்ற 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும் . இதனால் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார் .

Views: - 140

0

0