விராட் கோலி பற்றி நீங்க விமர்சிக்காதீங்க : பாக் முன்னாள் வீரர் அப்ரிடியின் கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2022, 1:39 pm
Kohli - Updatenews360
Quick Share

விராட் கோலி பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறி இருப்பதாவது, விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும்.

ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் அப்ரிடியின் கருத்துகள் இந்திய ரசிகர்களால் விமர்சிக்கபட்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அன்புள்ள அஃப்ரிடி, சிலர் ஒரு முறை மட்டுமே ஓய்வு பெறுகிறார்கள், எனவே தயவு செய்து விராட் கோலியை இதிலிருந்து காப்பாற்றுங்கள், என்று டுவீட் செய்து உள்ளார்.

மிஸ்ரா 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் முறையே 76, 64 மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்ரிடி தனது வாழ்க்கையில் பலமுறை ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது முதல் டெஸ்ட் ஓய்வு 2006 ஆம் ஆண்டு இரண்டு வாரங்களில் திரும்ப எடுக்கப்பட்டது. 2010 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த அப்ரிடி, அதன்பிறகு பிறகு அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஆனால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வற்புறுத்தலின் பேரில் அதை திரும்பப் பெற்றார்.

அவர் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தினார், பின்னர் இறுதியாக 2017 இல் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக் அறிவித்தார்.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி சக வீரர்களையும் சரி, மற்ற நாட்டு வீரர்களையும் சரி கண்ணியமாக நடத்துபவர். தோனி விமர்சனத்துக்குள்ளான போதும் துணை நின்றதும் கோலிதான், ஸ்மித் சூதாட்டத்தால் சிக்கிய போது, கடைசி போட்டியில் களமிறங்கிய ஸ்மித்தை கைத்தட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என கூறியதும் கோலிதான் என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 228

0

0