“தி ராக்“ குடும்பத்தினருக்கு கொரோனா! இன்ஸ்டாவில் வந்த “ஷாக்“

3 September 2020, 10:29 am
THe Rock - Updatenews360
Quick Share

பிரபல மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் குடும்பத்திற்க கொரோனா உறுதியாகியுள்ளது.

90ஸ் கிட்ஸின் பேவரைட் பிரபல WWE வீரராக வலம் வந்தவர் டிவைன் ஜான்சன். “தி ராக்“ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இவர் ஹாலிவுட் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான், என் மனைவி மற்றும் இருமகள்கள் என அனைவருக்கும் கடந்த 3 வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பமாக எங்களுக்கு இது மிகப்பெரிய சவாலான மற்றும் கடினமான விஷயம் என கூறியுள்ள அவர், தனிப்பட்ட முறையில் தனக்கு இது சவாலானது என தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீரனாக இருந்த போது எத்தனையோ மோசமான காயங்களில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட சவாலை விட தற்போது கொரோனா தொற்று எதிர்கொள்வது வித்தியாசமாக உள்ளதாக தெரிவித்தள்ளார்.

குறிப்பாக என் குடும்பத்தினரை பாதுகாப்பது என்னுடைய முதன் முன்னுரிமையாக உள்ளது, இதில் என் குழந்தைக்கு லேசான அறிகுறி உள்ளதை அதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். எனக்கும் மனைவிக்கும் தீவிர அறிகுறிகள் இருந்தாலும் நாங்கள் இப்போது நலமுடன் இருக்கிறோம், எங்களுக்கு கொரோனா வந்ததற்கு எங்கள் நண்பர்கள்தான் காரணம் என்றாலும், அவர்கள் எங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்கள் என கூறியுள்ளார்.

எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் கொரோனாவில் இருந்து மீண்டு இது போன்ற போராட்டத்தை சந்திக்கும் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எல்லோருடைய வாழ்த்துகளை எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள டிவைன் ஜான்சன், கவனமுடன் இருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள், முக கவசத்தை அணிந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 8

0

0