கலக்கும் மெக்குலம் – ஸ்டோக்ஸ் COMBO… பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து… 3வது டெஸ்டிலும் தோல்வி ; சொந்த மண்ணில் தொடரும் சோகம்!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 1:00 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வரும் இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், ஏற்கனவே, 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 304 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் குவித்தது.

50 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் டக்கெட் மற்றும் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதன்மூலம், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

சொந்த மண்ணில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது. மேலும், சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே தழுவியுள்ளது.

அதேவேளையில், பயிற்சியாளராக மெக்குல்லமும், கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் பொறுப்பேற்ற பிறகு, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

Views: - 397

0

0