இங்.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : 19 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி

12 September 2020, 11:14 am
billings- updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸி.,யை முதலில் பேட் செய்ய பணித்தது.

அதன்படி, களமிறங்கிய அந்த 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 73 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்னும், ஸ்டொயினிஸ் 43 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள், எதிரணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். தொடக் வீரரான பேர்ஸ்டோவ் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். எதிர்முனையில் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்காக சாம் பில்லிங்ஸ் போராடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

பில்லிங்ஸும் தன்னால் முடிந்த வரை விளையாடி, 100 பந்துகளில் 118 ரன்கள் குவித்து ஆட்டத்தின் இறுதி பந்தில் அவுட்டானார். இதனால், இங்கிலாந்து அணியால் 275 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Views: - 0

0

0