முதல் பந்துலேயே கோலி டக் அவுட்…. 15 ரன்னுக்கு 4 விக்., இழப்பு : மிடில் ஆர்டரில் தடுமாறும் இந்திய அணி!!

Author: Babu
5 August 2021, 7:55 pm
india vs england - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ரூட் மட்டுமே நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தார். மற் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு சுருண்டது.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் அபாரமான தொடக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 97ஐ எட்டிய போது, ரோகித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து வந்த புஜாரா 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 4வது வீரராக வந்த கேப்டன் கோலி வந்த வேகத்தில் முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார்.

விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக ஆடி வரும் ராகுல் அரைசதம் விளாசினார். இருப்பினும், அவர் செய்த சிறு தவறினால், ரகானே ரன் அவுட்டாகி வெளியேறினார். வெறும் 15 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இந்திய அணி இழந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேஎல் ராகுல் மற்றும் பண்ட் இருவரும் பேட்டிங் செய்து வந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Views: - 568

0

0