சிறு வயதில் செய்த தவறு… அறிமுக போட்டியிலேயே இடைநீக்கம்.. இங்., வீரருக்கு நிகழ்ந்த சோகம்..!!!

8 June 2021, 11:04 am
ollie robinson england - updatenews360
Quick Share

8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட டுவிட்டால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமான இங்கிலாந்து வீரர், தொடரில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. லார்ட்சில் நடந்து வரும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 378 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அறிமுக வீரர் 200 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதேபோல, இங்கிலாந்து அணியில் சர்வதேச டெஸ்டில் அறிமுகமான ஒல்லி ராபின்சனும் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக, அறிமுக போட்டியிலேயே ஸ்விங் மற்றும் பவுன்சர்களை வீசி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் ஒல்லி ராபின்சன். இவர்தான் அடுத்த இங்கிலாந்து அணியின் எதிர்கால பந்து வீச்சாளர் என ரசிகர்களும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அன்றைய மாலையிலேயே ஒல்லி ராபின்சனுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது. அதாவது, 8 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது. இந்த நிலையில், அவரது டுவிட் உறுதி செய்யப்பட்டதால், அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 346

0

0