வேகப்பந்து வீச்சாளர்கள் தொட முடியாத சாதனையை படைத்த ஆண்டர்சன்..!

26 August 2020, 4:51 pm
James-Anderson-updatenews360
Quick Share

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரும் எட்டாத மைல்கல்லை எட்டியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். 2003ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன், பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், 600 விக்கெட் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இதற்கு முன்பாக, 600 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன், ஷேன்வார்னே, அனில்கும்ப்ளே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பின் காரணமாக ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று மூத்த வீரர்கள் கூறி வந்த நிலையில், இச்சாதனையை படைத்து, அவர்களின் வாயை ஆண்டர்சன் அடைத்துள்ளார்.

Views: - 36

0

0