மழையால் தப்பிய இந்தியா… விமர்சிக்கும் இங்., முன்னாள் கேப்டன் : பதிலடி கொடுக்கும் இந்திய ரசிகர்கள்…!!

18 June 2021, 6:13 pm
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் தடைபட்டுள்ள நிலையில், இந்திய அணியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் 9 நாடுகள் இதில் கலந்து கொண்டனர். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றது.

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

match - rain - updatenews360

ஆனால், இன்று அதிகாலை முதலே போட்டி நடக்கும் சவுதாம்டனில் லேசான மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால், டாஸ் போடும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, போட்டியின் முதல் செசன் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் 5 நாட்களில் 2 அல்லது 3 நாட்கள் மழை குறுக்கிடும் என ஏற்கனவே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடை பட்டிருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சவுதாம்டனில் பெய்து வரும் மழையினால் இந்தியா தப்பித்து விட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பார்த்து ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள், அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Views: - 384

0

0