ரூட், ஸ்டோக்சின் நிதான ஆட்டத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து : 2வது நாள் முடிவில் 555/8

6 February 2021, 6:25 pm
Quick Share

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் சேர்த்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாள் ஆட்டத்தை ஜோ ரூட் (128), ஸ்டோக்ஸ் (0) ஆகியோர் தொடங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு முனையில் ஸ்டோக்ஸ், சிக்சரும், பவுண்டரியும் பறக்க விட்டாலும், மறுமுனையில் நிதானமாக ஆடி இரட்டை சதம் விளாசினார் ஜோ ரூட். இது அவருக்கு 5வது இரட்டை சதமாகும்.

இதைத் தொடர்ந்து, ஸ்டோக்ஸ் (82), போப் (34) பெவிலியன் திரும்பிய நிலையில், ரூட் 218 ரன்களில் நதீம் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த பட்லர் (30), ஆர்ச்சர் (0) ஆகியோர் இஷாந்த் சர்மாவின் அடுத்தடுத்த பந்தில் அவுட்டாகினர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, பும்ரா, அஸ்வின், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

Views: - 0

0

0