ரூட்டின் சிறப்பான பந்துவீச்சால் தப்பான ரூட்டில் போன இந்திய அணி : முதல் ஓவரிலேயே 2 விக்., இழந்து தடுமாறும் இங்கிலாந்து!!

25 February 2021, 4:44 pm
Root - updatenews360 (2)
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 145 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், முதல் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கில் (11), புஜாரா (0), கோலி (27) அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தாலும், ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த இன்னிங்சில் இந்திய அணி இமாலய ரன்குவிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட்டின் பந்து வீச்சு அமைந்தது. அவரது சுழலில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை தாரை வார்த்து கொடுத்தனர்.

ரூட் வீசிய முதல் 3 ஓவர்களில் ரன் எதுவுமின்றி, பண்ட் (1), வாஷிங்டன் சுந்தர் (0), அக்ஷர் படேல் (0) ஆகியோரின் விக்கெட்டை இழந்தனர். இதைத் தொடர்ந்து, அஸ்வின் (17), பும்ரா (1) ஆகியோரின் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார். இதனால், இந்திய அணி 145 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய ரூட் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, அக்ஷர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே க்ரவுளி, பேர்ஸ்டோவ்வின் விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது.

Views: - 15

0

0