‘இங்கிலாந்து தொடரில் சாதித்தே ஆக வேண்டும்’… ஓட்டலில் கேப்டன் கோலி தீவிர பயிற்சி!!

29 January 2021, 6:39 pm
Kohli workout - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சாதிக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தீவிரமாக ஹோட்டல் அறைக்குள்ளேயே பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னையின் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக இரு அணி வீரர்களும் 6 நாட்கள் ஹோட்டல் அறைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஹோட்டலுக்குள் முடங்கியுள்ள நிலையிலும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து கோலி பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டதால், இந்த தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி உள்ளார்.

https://www.instagram.com/reel/CKnsxNWAzNl/

கோலி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் நடக்கவுள்ளது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்குகிறது.

இங்கிலாந்து தொடர் அட்டவணை

டெஸ்ட் போட்டிகள்
பிப் 5 – 9 : முதல் டெஸ்ட், சென்னை
பிப் 12 – 17 : இரண்டாவது டெஸ்ட், சென்னை
பிப் 24 – 28 : மூன்றாவது டெஸ்ட், அஹமதாபாத்
மார்ச் 4- 8: நான்காவது டெஸ்ட், அஹமதாபாத்

டி-20
மார்ச் – 12: முதல் டி-20, அஹமதாபாத்
மார்ச் – 14: இரண்டாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 16: மூன்றாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 18: நான்காவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 20: ஐந்தாவது டி-20, அஹமதாபாத்

ஒருநாள்
மார்ச் – 23: முதல் ஒருநாள், புனே
மார்ச் – 26: இரண்டாவது ஒருநாள், புனே
மார்ச் – 28: மூன்றாவது ஒருநாள், புனே

Views: - 0

0

0

1 thought on “‘இங்கிலாந்து தொடரில் சாதித்தே ஆக வேண்டும்’… ஓட்டலில் கேப்டன் கோலி தீவிர பயிற்சி!!

Comments are closed.