பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் வெளியீடு : அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் இங்கிலாந்து…!!

3 July 2021, 7:08 pm
england team - updatenews360
Quick Share

பாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான கிரிக்கெட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது. இதற்காக, பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 8ம் தேதி தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 13 ஆகிய நாட்களில் 2 மற்றும் 3வது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களும், இந்தத் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியை ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

மோர்கன் (கேப்டன்), ஜோ ரூட், ஜேசன் ராய், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், டாம் பாண்டன், சாம் கரண், டாம் கரண், சாம் பில்லிங்ஸ், டாசன், கார்டன், அடில் ரஷித், லிவிங்ஸ்டன், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Views: - 471

0

0