அதிரடி ஆரம்பம் கொடுத்த இந்தியா… நங்கூரம் போட்ட ரூட் : நாட்டிங்காம் டெஸ்டின் முதல்நாள் அப்டேட்..!!

Author: Babu
4 August 2021, 8:04 pm
india - england -- - updatenews360
Quick Share

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸ் முதல் ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, சிப்லே 18 ரன்னிலும், க்ரௌவ்லி 27 ரன்னிலும் இந்தியாவின் வேகத்திற்கு வீழ்ந்தனர். இதனால், அந்த அணி 66 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அப்போது, 4வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் இணை மேற்கொண்டு விக்கெட்டுக்களை விழ விடாமல் நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்று முயற்சியில் இந்திய அணி வீரர்களும் பந்து வீசி வருகின்றனர்.

Views: - 335

0

0