இங்கிலாந்து – பாக்., இடையிலான 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் : பென் ஸ்டோக்ஸ் விலகல்..!

13 August 2020, 12:00 pm
joe root practise england - updatenews360
Quick Share

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்திலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரையும் கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

அதேவேளையில், பாகிஸ்தான் அணியை பொறுத்த வரையில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் சொதப்பி விடுகின்றனர். எனவே, இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று, தொடரை அடுத்த போட்டி வரைக்கும் எடுத்து செல்ல வேண்டும் என எண்ணுவார்கள்.

பென் ஸ்டோக்ஸ் சொந்த விஷயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்குப் பதிலாக ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Views: - 35

0

0