ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார் : மறைந்தது ஐ.பி.எல். வர்ணனையாளரின் குரல்..!

24 September 2020, 4:48 pm
dean jones1 -- updatenews360
Quick Share

மும்பை : ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று காலமானார்.

1984ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் டீன் ஜோன்ஸ் இடம்பிடித்திருந்தார். 1984ம் ஆண்டு முதல் 1992 வரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 11 சதங்களுடன் 3,631 ரன்களை சேர்த்திருந்தார்.

டெஸ்ட் வரலாற்றில் 1986ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது சிறந்த போட்டியாகும். சென்னையின் காலநிலையை ஜோன்ஸின் உடல் ஒத்துக்காத நிலையிலும், 210 ரன்கள் குவித்தது இன்று வரை பேசப்படும் ஆட்டமாகும். இதுவரையிலும் இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் அதிகபட்ச ரன்களாக அவரது சாதனையே உள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்காக 164 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6,068 ரன்களை சேர்த்துள்ளார். 1994ம் ஆண்டில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இருந்து ஓய்வு பெற்ற அவர், போட்டி வர்ணனையாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்து வந்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ் உள்ளிட்ட அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அதோடு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் தங்கியிருந்த போது, மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0