பிரபல கால்பந்து வீரர் மரடோனா மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் கால்பந்து உலகம்!!

3 November 2020, 2:33 pm
maradona - updatenews360
Quick Share

அர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல கால்பந்து வீரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கேப்டனுமாகவும் இருந்தவர் டீகோ மரடோனா (60). கால்பந்து உலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மரடோனா, லா பிளாட்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பல்வேறு முன்னணி பிரபலங்கள் உயிரிழந்து அதிர்ச்சியளித்து வரும் நிலையில், மரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மரடோனா கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், மதுபானம் மற்றும் மனதளவிலான பாதிப்புக்காக மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா (வயது 60). கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உள்ளனர்.

மரடோனா மருத்துவமனையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார் என கூறப்படுகிறது.

Views: - 18

0

0

1 thought on “பிரபல கால்பந்து வீரர் மரடோனா மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் கால்பந்து உலகம்!!

Comments are closed.