மெஸ்சியின் மெகா ஒப்பந்தம் மூலம் வெளிவந்த ஸ்டார் வீரர்களின் வரிச்சுமை!

3 February 2021, 2:01 pm
messi - updatenews360
Quick Share

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியின் ஒப்பந்தத் தொகை வெளியானதையடுத்து ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் செலுத்தும் அதிகபட்ச வரி தொகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயினின் பார்சிலோனா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சியின் வரலாறு காணாத ஒப்பந்த தொகை குறித்து சமீபத்தில் அந்நாட்டுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. மெஸ்ஸிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 555 மில்லியன் யூரோக்கள் கிடைத்துள்ளதாக அந்த அந்த செய்தியில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிகபட்ச ஒப்பந்தத் தொகை வரலாறு காணாத ஒப்பந்தத் தொகை வெளிவந்திருந்தாலும், ஸ்பெயின் கால்பந்து தொடரில் பங்கேற்கும் முன்னணி நட்சத்திர வீரர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் ஒப்பந்த தொகையில் கிட்டத்தட்டப் பாதி தொகையை வரியாகச் செலுத்தி வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மெஸ்ஸிக்கு இணையாக அதே தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் இத்தாலி வீரர் ஒருவர் ஸ்பெயினில் செலுத்தும் வரித்தொகையை விடக் குறைவாகவே செலுத்துகின்றனர்.

ஸ்பெயினில் விதிக்கப்படும் அதிகபட்சமான வரி குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்பெயினில் இருப்பதைவிட இத்தாலி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விதிகளில் தளர்வு உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெயின் அரசைப் பொறுத்தவரையில் பல்வேறு நட்சத்திர கால்பந்து வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் தான் இந்த கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீரர்களின் வருமானவரித்துறை சமர்ப்பிப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் நட்சத்திர வீரரான மெஸ்சியே சிக்கினார். அப்போது 21 மாதங்கள் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்த போது அபராதத்துடன் தப்பினார். இதேபோல கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட பல வீரர்களை ஸ்பெயின் அரசாங்கம் குறி வைத்தாகவும் கூறப்படுகிறது. நெய்மர் பிரான்ஸ் நாட்டு கிளப் அணியான பாரிஸ் செயிண்ட் ஜெர்மனி அணிக்கும், ரொனால்டோ இத்தாலியின் ஜூவாண்டஸ் அணிக்கும் தற்போது மாறியுள்ளனர்.

ஆனால் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் அந்த அணி 30 பட்டங்களை வெல்லக் காரணமாக இருந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அந்த அணியின் போக்கு சரியில்லை என்பதால் அந்த அணியில் இருந்து விலக முற்பட்டார். சட்டரீதியான நடவடிக்கையைத் தவிர்க்க இந்த சீசன் முழுவதும் பார்சிலோனா அணிக்காக விளையாடும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

Views: - 15

0

0