அவர உடனே அனுப்புங்க.. கோரிக்கையை ஏற்று இங்கிலாந்துக்கு வீரரை அனுப்பிய பிசிசிஐ : 4வது டெஸ்டில் இந்திய அணியில் இணையும் இளம் வீரர்..!!

Author: Babu Lakshmanan
2 September 2021, 10:12 am
india win 2 - updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் விளையாடும் இந்திய அணியில் இளம் வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. கடைசி இரு போட்டிகள் தான் தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் என்பதால், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதல் 3 போட்டிகளில் ஒரேயொரு மாற்றத்துடன் விளையாடிய இந்திய அணியில், 4வது போட்டியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. அதாவது, கடந்த போட்டியில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே அடுத்த போட்டியில் அவர் ஆட வாய்ப்பில்லை.

prasidh krishna - updatenews360

இந்த நிலையில், எஞ்சிய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில், இளம் இந்திய வீரரை அனுப்பி வைக்குமாறு இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவை இங்கிலாந்துக்கு அனுப்பியுள்ளது. இவர் இன்று தொடங்கும் 4வது டெஸ்டில் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதேபோல, 3 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னராக களமிறங்கி ஆடிய ரவீந்திர ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த போட்டியில் அவரும் விளையாடுவது சந்தேகம்தான். எனவே, 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

Views: - 447

0

0