கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்

25 November 2020, 10:41 pm
Quick Share

அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார் .

கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருபவர் அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் மரடோனா. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த வீரராக கருதப்படும் மரடோனா மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 60. உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986ஆம் ஆண்டு இவர் தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.

Views: - 32

0

0