பல காதலிகள்… குழந்தைகள் எண்ணிக்கையே தெரியாது… ஜாம்பவான் பீலேவின் அதிர்ச்சி வெளியீடு!

23 February 2021, 11:24 pm
Pele - Updatenews360
Quick Share

பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே தனது துணைக்கு நம்பிக்கையானவராக இல்லை என்றும், தனது குழந்தைகள் எண்ணிக்கை எத்தனை என்பது கூட தெரியாது என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து அரங்கில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் பிரேசிலைச் சேர்ந்த பீலே. இவர் குறித்த ஆவணப்படம் ஒன்று இந்த மதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மூன்று முறை உலகக்கோப்பை வென்ற பீலே தனக்குப் பல காதலிகள் இருந்ததாகவும், தனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதே தெரியாது என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளார்.

மூன்று முறை திருமணம் செய்து கொண்ட 73 வயதான பீலே. தற்போது தனது மூன்றாவது மனைவியான மார்சியா ஆக்கியுடன் வாழ்ந்து வருகிறார். மார்சியாவுடன் சுமார் ஆறு ஆண்டுகள் டேட்டிங்கில் ஈடுபட்ட பின் கடந்த 2016 இல் இவரைத் திருமணம் செய்து கொண்டார் பீலே. இந்நிலையில் பிரிட்டன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த அதிர்ச்சித் தகவல் குறித்து பீலே கூறுகையில், “நேர்மையாக எனக்குப் பல காதலிகள் இருந்தனர். அவர்கள் மூலம் எனக்குக் குழந்தை பிறந்ததுள்ளது. அவர்கள் குறித்த தகவல் எனக்குப் பின்னர் தான் தெரியவந்தது. எனது முதல் மனைவி மற்றும் முதல் காதலிக்கு இந்த விஷயங்கள் தெரியும். அவர்களிடம் நான் பொய் சொல்லவில்லை” என்றார்.

இதற்கிடையில் வெளிப்படையாகத் தெரிந்து பீலேவிற்கு மொத்தமாக 7 குழந்தைகள் உள்ளனர். இதில் சாண்டிரா மெக்காடோ என்பவரை தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என பீலே மறுத்தார். ஆனால் இவர் அவரின் மகள் தான் என்பதைக் கடந்த 1996 இல் நடந்த வழக்கில் உறுதி செய்யப்பட்டது. முதல் இரு திருமணத்தின் மூலம் பிலேவிற்கு கெல்லி (54 வயது), எடின்கோ(50 வயது), ஜெனிபர் (42 வயது), ஜோஸ்வா மற்றும் செலிஸ்டே (24 வயது) இரட்டையர்கள் என மொத்தமாக ஐந்து வாரிசுகள் உள்ளனர்.

Views: - 11

0

0