இந்த மாதிரி இந்திய டீமை மாற்றியது கோலி தான்: புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

26 January 2021, 7:06 pm
virat kohli - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியைப் போராடும் குணம் கொண்ட அணியாக மாற்றியது விராட் கோலி தான் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முக்கியமான வீரர்கள் காயமடைந்த நிலையிலும் கூட ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அந்த தொடரில் எழுச்சி பெற்று 2 – 1 எனத் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதற்கிடையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதை இங்கிலாந்து அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியைப் போராடும் குணம் கொண்ட அணியாக மாற்றியது விராட்கோலி தான் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து நாசர் உசேன் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்த ஒரு அணியாக இருந்தாலும் 1 – 0 எனப் பின்தங்கிய நிலையில், 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, கேப்டன் கூட இல்லாத நிலையில் சிறந்த முன்னணி வீரர்கள் பவுலிங் இல்லாத நிலையிலும் செயல்படுவது என்பது மிகவும் கொடுமையான விஷயம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மிகவும் உறுதியாக உள்ளது. இப்படி ஒரு வலிமையான இந்திய அணியாக மாற்றியது கண்டிப்பாகக் கோலி தான். அதனால் இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் எந்த ஒரு தவறும் செய்யாது.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து அணிக்குச் சாதகமான விஷயம் என்றாலும், இந்திய அணிக்கு எதிராகக் கடினமான சவாலை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் அந்நிய மண்ணில் இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்படலாம். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை நான் சிறப்பான தொடராகப் பார்க்கிறேன். அதனால் சிறந்த 13 அல்லது 15 வீரர்களை இங்கிலாந்து அணி களமிறக்கினால் வெற்றி பெறலாம் என நினைக்கிறேன். அதேபோல சென்னை மைதானத்தில் முதல்நாளிலேயே பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் களம் இறங்கினால் இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இது சிறந்த முன்னோட்டமாக அமையலாம்” என்றார்.

Views: - 7

0

0