ஒயிட் பால் கிரிக்கெட்டில் இந்தியா ஒன்னுமே இல்ல… 2011 உலகக்கோப்பை ஜெயிச்சதே அதிர்ஷ்டம்… முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
12 November 2022, 11:38 am
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியை, இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் சேர்த்தது. பின்னர், இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று அசத்தியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது இந்திய அணியின் குறைகளை சுட்டிக் காட்டி வெளிநாட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய வல்லுனர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் கடுமையான அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணியை விமர்சிக்க இந்திய வல்லுநர்கள் பயப்படுவதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இந்திய அணி குறித்து அவர் கூறியதாவது :- யாருமே இந்திய அணியை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். இந்தியாவில் ஒருநாள் வேலையை இழந்துவிடுவோம் என கவலைப்படுகிறார்கள். ஆனால், தற்போது நேரடியாக பேச வேண்டிய நேரம்.

அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வு தரம் குறைவாகவே இருந்தது. மேலும், மிகவும் நேர்த்தியான வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சிலும் குறைபாடு. ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய பிரிமீயர் லீக்கில் உலகின் ஒவ்வொரு வீரர்களும், அவர்களின் பேட்டிங் திறமையை எப்படி முன்னேற்றினார்கள் எனச் சொல்கிறார்கள். சொந்த மண்ணில் 2011ல் உலகக்கோப்பையை ஜெயிச்சதற்கு பிறகு, இந்தியா இதுவரை சாதித்தது என்ன?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 533

0

0