‘ஓவரா கொண்டாடாதீங்க… உண்மையான டீம் வந்துட்டு இருக்காங்க’ : ஆஸி.,யை போல வாயைவிடும் முன்னாள் இங்கிலாந்து வீரர்!

20 January 2021, 6:00 pm
Indian Cricket Team - Updatenews360
Quick Share

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக முன்னாள் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பின் இந்திய அணியை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்திய அணிக்கு இங்கிலாந்து மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் அவர் கோலி மற்றும் அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரை வெற்றியுடன் முடித்ததற்குப் பின்பாக தற்போது இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.

கொரோனா வைரஸ் லாக் டவுனுக்கு பின்பாக இந்தியாவில் நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் இதுவாகும். இதற்கிடையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியை மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பீட்டர்சன் இந்தியில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றி பல்வேறு தடைகளைக் கடந்து வந்துள்ளது. இதனால் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகிறது. ஆனால் உண்மையான அணி இந்திய அணியை அதன் சொந்த பின்னணியில் எதிர்கொள்ள உள்ளது. அதனால் எச்சரிக்கையுடன் காத்திருங்கள் இந்த 2 வாரங்களில் அதிகமாகக் கொண்டாடி விடவேண்டாம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி விடுப்பிலிருந்து மீண்டும் முதல் முறையாக விளையாட உள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
முதல் முறையாக பயோ பபுள் என்ற பாதுகாப்பான முறையில் நடத்தப்பட உள்ளது.

இங்கிலாந்து தொடர் அட்டவணை

டெஸ்ட் போட்டிகள்
பிப் 5 – 9 : முதல் டெஸ்ட், சென்னை
பிப் 12 – 17 : இரண்டாவது டெஸ்ட், சென்னை
பிப் 24 – 28 : மூன்றாவது டெஸ்ட், அஹமதாபாத்
மார்ச் 4- 8: நான்காவது டெஸ்ட், அஹமதாபாத்

டி-20
மார்ச் – 12: முதல் டி-20, அஹமதாபாத்
மார்ச் – 14: இரண்டாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 16: மூன்றாவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 18: நான்காவது டி-20, அஹமதாபாத்
மார்ச் – 20: ஐந்தாவது டி-20, அஹமதாபாத்

ஒருநாள்
மார்ச் – 23: முதல் ஒருநாள், அஹமதாபாத்
மார்ச் – 26: இரண்டாவது ஒருநாள், அஹமதாபாத்
மார்ச் – 28: மூன்றாவது ஒருநாள், அஹமதாபாத்

Views: - 0

0

0