இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னாவின் தந்தை திடீர் மரணம் : சோகத்தில் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2022, 3:23 pm
Raina Father- Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா இன்று காலமானார்.

நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த திரிலோக் சந்த் ரெய்னா காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவால் ரெய்னா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

திரிலோக் சந்த் ரெய்னா சொந்த கிராமம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவரி ஆகும். ரெய்னாவின் தந்தை 1990களில் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிபி காஜியாபாத்தில் உள்ள முராத்நகருக்கு வந்தார்.

Suresh Raina's Family - Father, Mother, Siblings, Wife, Children

சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு 15 ஆகஸ்ட் அன்று இன்ஸ்டாகிராம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் மற்றும் 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Views: - 1278

0

0