உயிருக்கு போராடும் நியூசி., அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் : ரசிகர்கள் உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 9:36 am
Chris Cranes- Updatenews360
Quick Share

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, 3000 ரன்களுக்கு மேல் அடித்த வெகு சில ஆல்ரவுண்டர்களில் நியூசி வீரர் கெய்ன்ஸும் ஒருவர். ஆல்ரவுண்டரான கிரிஸ் கெயின்ஸ் நியூஸிலாந்து முதல் ஐசிசி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்.

நியூசிலாந்துக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,320 ரன்கள் அடித்திருக்கிறார். 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4950 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 201 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார்.

டந்தவாரம் ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.. ஆனால், சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

51 வயதாகும் கெய்ன்ஸ்க்கு தற்போது உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 621

0

0