பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: நட்சத்திர வீராங்கனை அதிர்ச்சி தோல்வி…!!

By: Aarthi
9 October 2020, 8:24 am
tennis -updatenews360
Quick Share

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை கிவிட்டோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், தற்போது குறைந்த அளவிலான ரசிகர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனை இகா ஷியான்டக், அர்ஜெண்டினா வீராங்கனை நடியா போடோரோஸ்காவை 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் நடப்பாண்டில் ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற சோபியா ஹெனின் மற்றும் செக் குடியரசின் கிவிட்டோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் அமெரிக்காவின் சோபியா ஹெனின் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Views: - 52

0

0