போண்ணா நீ வேற பந்தே கண்ணுக்கு தெரியல… விழுந்து விழுந்து சிரித்த அஸ்வின், வாஷிங்டன் சுந்தர்!

17 January 2021, 9:49 pm
Ashwin Natraj Sundar - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய விதம் குறித்து நடராஜனிடம் அஸ்வின் கேள்வி கேட்டபோது, நடராஜன் அளித்த பதில் அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்திய அணி 6 விக்கெட்டுக்களை விரைவாக இழந்து தத்தளித்த போது இந்திய பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சார்பில் தாகூர் ஆகியோர் இணைந்து இந்திய அணிக்கு 7வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை நான்காவது டெஸ்டில் ஒரு கைபார்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சார்துல் தாகூர் ஆகியோரை இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்திற்குப் பின் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி எடுத்தார். பிசிசிஐ சேனல் சார்பாக நடத்தப்பட்ட இந்த பேட்டியில் அஸ்வின் மூவரிடமும் தங்களின் ஆட்டம் குறித்து கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில் நடராஜனிடம் தமிழில் பேசினார் அஸ்வின்.

கடைசியாகப் பங்கேற்ற 10 முதல் தர இன்னிங்ஸ் போட்டிகளில், ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆன நடராஜனிடம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ரன் எடுத்தது எப்படி இருந்தது எனக் கேள்வி எழுப்பினார். ஆஸ்திரேலியாவின் அசுர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் பந்து கண்ணுக்கே தெரியவில்லை எனப் பதில் அளித்தார்.

இது அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் 1 ரன் எடுத்து நடராஜன் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஆனால் எதிர்முனையில் இருந்த முகம்மது சிராஜ் அவுட்டாக, இந்திய அணி ஆல் அவுட்டானது. தவிர, சார்துல் விளையாடிய சில ஷாட்கள் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் விளையாடும் ஷாட்களை நினைவுபடுத்தும் விதமாக இருந்ததாகவும் அஸ்வின், தாகூரை பாராட்டினார். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை 3 விக்கெட் மற்றும் அரைசதத்துடன் துவங்கியது மிகச்சுலபமாக உள்ளதா என அஸ்வின் கேட்க அதற்கு இல்லை நிச்சயமாக இல்லை என சுந்தர் பதில் அளித்தார்.

Views: - 5

0

0