இந்த முட்டாள் தனத்தை இந்திய கேப்டன் யாரும் செய்யவில்லை: இல்லேன்னா கத்தி தான்… கடுப்பான காம்பீர்!

18 April 2021, 6:28 pm
Quick Share

இந்திய கேப்டன் ஒருவர் இதே தவறை செய்து இருந்தால் ரசிகர்கள் தங்களின் கத்தியை எடுத்திருப்பார்கள் என முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரு மிகச்சிறந்த அணிகளுக்கு கேப்டனாக திகழும் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது . டிவிலியர்ஸ் (76), ஜேமின்சன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த போட்டியில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரை சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் விராட் கோலி விக்கெட் அடக்கமாகும். இதற்கிடையில் தனது முதல் ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய போதும் அவருக்கு அடுத்த ஓவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக ஷாகிப் அல் ஹாசனுக்கு அடுத்த ஓவரை கொடுத்தார்.

இது சரியான முடிவு அல்ல என முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக காம்பீர் கூறுகையில், “விராட் கோலி மிகப்பெரிய விக்கெட் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான கேப்டன் முடிவை எனது வாழ்நாளில் நான் கண்டதே கிடையாது.

ஒரு பவுலர் தனது முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவருக்கு அடுத்த ஓவர் வழங்காமல் வேறு ஒருவருக்கு கேப்டன் ஓவர் வழங்குகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மார்கனின் முட்டாள்தனத்தால் ஒருவேளை அடுத்தவரை வருண் சக்கரவர்த்தி வீசியிருந்தால் அவர் 3-வது விக்கெட் அல்லது மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம்.
டிவிலியர்ஸ் என்ற மிகப்பெரிய விக்கெட் எதிரணியிடம் உள்ளது. இருந்தாலும் இந்த நெருக்கடி அவருக்கும் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு இந்திய கேப்டனும் இதுவரை இதுபோன்ற தவறை செய்யவில்லை. ஏனென்றால் ஒரு இந்திய கேப்டன் இந்த தவறை செய்திருந்தால் ரசிகர்கள் தங்களின் கத்தியை எடுத்து இருப்பார்கள். இதுவரை சந்தித்த மோசமான கேப்டன்கள் முடிவில் இதைவிட மோசமான நான் கண்டதே கிடையாது” என்றார்.

Views: - 70

0

0