ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த மீரா பாய்க்கு தங்கம்? எப்படி தெரியுமா?

Author: Udayachandran
26 July 2021, 3:12 pm
Merrabhai Gold - Updatenews360
Quick Share

ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார். இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. ஒருவேளை அவர் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Views: - 262

0

0