கெத்து காட்டும் குஜராத்… 8வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்.. பெங்களூரூவுக்கு சோகத்திலும் ஒரு சந்தோஷம் ..!!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 8:32 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் டூபிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கோலி 58 ரன்னும், பட்டிதர் 52 ரன்னும், மேக்ஸ்வெல் 33 ரன்னும் எடுத்தனர்.

இந்த இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் சஹா (29), கில் (31), சுதர்சன் (20) ஓரளவுக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இறுதியில் மில்லர் (39), ராகுல் திவேதியா (43) அதிரடியாக குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 8 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரூ அணி 5 ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரூ தோல்வியடைந்திருந்தாலும், ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த கோலி அரைசதம் அடித்திருப்பது பெங்களூரூ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1218

0

0