5 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் உடன் வலம் வரும் பிரபல கிரிக்கெட் வீரர்! அது என்ன வாட்ச்? அப்படி என்ன ஸ்பெஷல்? | Patek Philippe Nautilus Watch
Author: Hemalatha Ramkumar28 August 2021, 2:28 pm
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் வெளிநாட்டில் ரோல்ஸ் ராய்ஸில் இருப்பது போன்ற பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
தலையில் தொப்பி மற்றும் சன்கிளாஸ் உடன் அவர் வாழும் ஆடம்பர வாழ்க்கை முறையின் புகைப்படங்களை அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிறார்.
அப்படி அவரின் பல புகைப்படங்களில் கண்ணில் பட்டது தான் அந்த கைக்கடிகாரம்.
இது வழக்கமான சொகுசு கடிகாரம் மட்டுமல்ல. அது படேக் பிலிப் நாட்டிலஸ் பிளாட்டினம் 5711 எனும் கை கடிகாரம், அதன் விலை ஆயிரமோ லட்சமோ இல்லை, 5 கோடி ரூபாயாம்.
GQ இந்தியாவின் தகவலின்படி, இந்த வாட்ச் 32 மரகதங்களைக் கொண்டுள்ளது மற்றும் முற்றிலும் பிளாட்டினத்திலான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
படேக் பிலிப் நாட்டிலஸ் பிளாட்டினம் 5711 வாட்ச் என்பதே மிகவும் அரிதானது அதிலும் மரகதங்கள் பதித்து பிளாட்டினத்தால் உருவான இந்த வாட்ச் எவ்வளவு அரிது என்பதை நேநேகளே யோசித்துக்கொள்ளுங்கள்.
5711 ஒரு அரிய வரம்பாக இருந்தாலும், இதே போன்ற வாட்ச்களை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் மற்றும் ராப்பர் டிரேக் போன்ற பிரபலங்களின் வரிசையில் இப்போது ஹர்திக் பாண்டியாவும் இணைந்துள்ளார்.
இந்த மாடல் வாட்ச் ரோஸ் கோல்ட் நாட்டிலஸ் 18K ரோஸ் கோல்ட் கேஸில் குறிப்பு எண் 5980/1R மற்றும் காலிபர் CH 28‑520 C போன்றது. இந்த வாட்ச் காலவரிசை மற்றும் தேதி அமைப்பையும் கொண்டுள்ளதாம்.
0
0