மெஸ்சிக்கு உதவி செய்யுங்கள்… சக வீரர்களிடம் கேட்டுக்கொண்ட பார்சிலோனா பாஸ்!

26 February 2021, 11:06 pm
Quick Share

மாட்ரிட்: பார்சிலோனா அணி வீரர்கள் மெஸ்சிக்கு உதவ வேண்டும் என பார்சிலோனா அணியின் பாஸ் ரோனால்டு கோயிமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தாண்டு நடந்துள்ள சீசசில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்சி மொத்தமாக இதுவரை 18 கோல்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் மெஸ்சியைத் தொடர்ந்து ஆண்டோனி கிரீஸ்மான் 6 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் எல்சி அணிக்கு எதிரான போட்டியிலும் துவக்கத்திலேயே இரு கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பார்சிலோனா அணியின் பாஸ் ஆன கோயிமான் கூறுகையில், “அணியின் பழமையான வீரரான மெஸ்சி அனைத்தையும் தானே செயல்படுத்தி வருகிறார். மெஸ்சி மொத்தமாக 18 முறை கோல்களை அடித்துள்ளார். இது மற்ற அனைவரும் சேர்ந்து அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கையாகும். அதனால் அவருக்கு நிச்சயமாக தற்போது உதவி தேவைப்படுகிறது. அணியின் சிறந்த அல்லது மூத்த வீரரை மட்டும் நம்பி எந்த நேரத்திலும் இருக்க முடியாது. அணியின் ஒவ்வொரு வீரரும் பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். வெறும் அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டும் முறையாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு எந்த நேரத்திலும் செயல்படுத்த முடியாது” என்றார்.

மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் அந்த அணி 30 பட்டங்களை வெல்லக் காரணமாக இருந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அந்த அணியின் போக்கு சரியில்லை என்பதால் அந்த அணியில் இருந்து விலக முற்பட்டார். சட்டரீதியான நடவடிக்கையைத் தவிர்க்க இந்த சீசன் முழுவதும் பார்சிலோனா அணிக்காக விளையாடும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

Views: - 9

0

0