நட்புனா இதுதான்யா நட்பு… சக போட்டியாளரான நண்பனுக்கும் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொடுத்த வீரர்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 August 2021, 6:12 pm
gold sharing 3 - updatenews360
Quick Share

பொதுவாக ஒலிம்பிக் போட்டி என்று எடுத்துக் கொண்டாலே, மனிதநேயம், நட்பு மற்றும் பாசம் உள்ளிட்ட அனைத்தையும் நாம் பார்க்க முடியும். அந்த வகையில், தற்போது நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.

ஆண்கள் உயரம் தாண்டும் பிரிவில் கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷீம் மற்றும் சக போட்டியாளரும், நீண்ட கால நண்பருமான இத்தாலி வீரர் கியான்மார்கோ டாம்பேரியாவும் உயரம் தாண்டுதலில் 2.37 மீட்டர் என்ற அளவில் இருந்தனர். 2.39 மீட்டர் உயரம் தாண்டும்போது இருவரும் 3 முறை தோல்வியடைந்தனர். அதேவேளையில், டாம்பேரியா காயமும் அடைந்தார்.

இதனிடையே, வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக் முறையை ஒலிம்பிக் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, கத்தாரின் முதாஸ் எஸ்ஸா பர்ஷீமிடம், தொடர்ந்து போட்டியில் விளையாட விரும்புகிறீர்களா..? எனக் கேட்டனர். அதற்கு, அவர் எங்கள் இருவருக்கும் தங்கம் கொடுப்பீர்களா..? என பதில் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கொடுக்க முடியும் எனக் கூறியவுடன், டாம்பேரியாவை பர்ஷீம் கட்டியணைத்தார்.

தங்கத்தின் ஆசைப்படாமல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பர்ஷீமின் இந்தச் செய்கை பலருக்கும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 429

0

0