திக்..திக்.. கடைசி பந்து வரை த்ரில் நிறைந்த போட்டி : 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 11:27 pm
Mumbai Won - Updatenews360
Quick Share

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 177 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் 51-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். இந்த கூட்டணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தது.

இதில் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்து சூரியகுமார் யாதவ் வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த இஷான் கிஷன் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய பொல்லார்டு 4 ரன்கள் எடுத்து வெளியேற, திலக் வர்மா 21 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அதிரடியாக ஆடிவந்த டிம் டேவிஸ், 21 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி பேட்டிங்கில் மும்பையை துவம்சம் செய்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா மற்றும் கில் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.

இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அவுட் ஆக, அடுத்து வந்த சுதர்சன் மற்றும் கேப்டன் ஹர்திக் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

ஆனால் சுதர்ஷன் இட் விக்கெட் ஆனார். பின்னர் கேப்டனுடன் சேர்ந்த மில்லர் நிதானமாக ஆடினார். ஹர்திக் 24 ரன்னில் இருந்த போது ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

12 பந்துகளுக்கு 20 ரன் தேவைஎன்ற போது திவாட்டியா களமிறங்கினார். இறுதி ஓவரில் 9 ரன் தேவை என்ற போதில், ஒரு ரன்னை மில்லர் எடுக்க, அடுத்த பந்தை திவாட்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை. 4 பந்துகளில் 8 ரன் தேவை என்ற போதில் இரண்டு ரன்கள் எடுக்க திவாட்டியா முற்பட்ட போது, ரன் அவுட் ஆனார்.

3 பந்துகளுக்கு 7 ரன் தேவை என்ற போதில் ரஷித்கான் களமிறங்கினார். ஒரு ரன் எடுக்கஇ 2 பந்துகளுக்கு 6 ரன் தேவை என்ற போது, அடுத்த பந்தை மில்லர் மிஸ் செய்ய, ஒரு பந்துக்கு 6 ரன் தேவை என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி பந்தை மிஸ் செய்த மில்லரால் மும்பை 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Views: - 1267

0

0