என்னப்பா ஆள் இல்லையா நான் வேணும்ன்னா வரட்டுமா: சேவாக் கிண்டல்!

13 January 2021, 8:51 pm
Quick Share

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்டில் பங்கேற்க ஆள் இல்லை என்றால் நான் வரத் தயாராக உள்ளதாக முன்னாள் வீரர் சேவாக் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் வென்றது. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனால் இந்த தொடர் 1-1 எனச் சமநிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் 15 ஆம் தேதி துவங்குகிறது.

ஆஸி கோட்டை

இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி கோப்பையைக் கைப்பற்றும் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி 1988 இல் இருந்து தற்போதுவரை ஒரு போட்டியில் கூட தோற்றது கிடையாது. ஆனால் இந்த டெஸ்டில் இந்திய அணி பலவீனமாகக் களமிறங்கவுள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் பங்கேற்க ஆள் இல்லையா நான் வரட்டுமா என இந்திய முன்னாள் வீரர் சேவாக் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் காயமடைந்த தொடர்கதையாகி உள்ளது. முதலில் இசாந்த் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.

இதன்பின் தொடரின்போது முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா என அடுத்தடுத்து வீரர்கள் காயம் அடைந்து தொடர்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. நான்காவது போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பங்கேற்பது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத சிராஜ், சாய்னி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் களமிறக்கும் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர்களான விரேந்தர் சேவாக் அணியில் விளையாடும் லெவலுக்கு ஆள் இல்லையா என வேடிக்கையாகத் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தாலும் இந்திய அணி வீரர்கள் காயமடைவதற்கு விரைவாகத் தீர்வு காண வேண்டும்.

Views: - 12

0

0