“எனக்கும் ஷாவிற்கும் எந்த சண்டையும் இல்லை” – சுப்மன் கில்…!

13 February 2020, 4:33 pm
Quick Share

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான T20I மற்றும் ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பதினைந்தாம் தேதியன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் தனது முதல் போட்டியை விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்திய அணியின் மற்றொரு இளம் வீரரான ப்ரித்வி ஷா ஓராண்டு தடைக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வந்துள்ளார். ஏற்கனவே காயத்தின் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆட்டத்தில் இடம்பெறவில்லை. மாயங்க் அகர்வால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.


இதைப்பற்றி கில் “எனக்கும் ஷாவிற்கும் எந்த சண்டையும் இல்லை. எங்களில் ஒருவர் நிச்சயம் ஆட்டத்தை தொடங்கவேண்டும். அதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இந்தியாவிற்காக விளையாட தயாராகிவிட்டேன். போதுமான அளவிற்கு எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply