“நான் பார்த்து பிரதமராக்கினா கடவுள் போல் நடந்து கொள்கிறாரே”..! இம்ரான் கானை வறுத்தெடுத்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்..!

12 August 2020, 6:47 pm
javed_miandad_Imran_Khan_Updatenews360
Quick Share

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத், நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கோபத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் வெளியாட்களை கொண்டுவருவதற்கு எதிராக மியான்தத் பேசினார். இம்ரான் கான் தனது சொந்த நாட்டு மக்களை விட வெளிநாட்டிலிருந்து மக்களை விரும்புவதற்காக அவர் மீது ஆத்திரத்தை அந்த வீடியோவில் வெளிப்படுத்தினார்.

திறமையற்றவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உயர் பதவிகளில் பணியாற்றுகிறார்கள் என்று மியான்தத் யூடியூப்பில் கூறினார்.

“நீங்கள் ஒரு முக்கிய பதவியில் ஒரு வெளிநாட்டவரை நியமித்தீர்கள். ஊழல் செய்த பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது என்ன நடக்கும்? உங்கள் சொந்த நாட்டில் மக்கள் பற்றாக்குறை உள்ளதா? நீங்கள் வெளிநாட்டிலிருந்து மக்களை பிசிபியில் வேலைக்கு அழைத்து வர என்ன அவசியம் உள்ளது?” என அதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் விளையாடும் நாட்களிலிருந்தே, இம்ரான் கானின் உந்துசக்தியாக தான் இருந்துள்ளேன் என்று அவர் மேலும் கூறினார்.

“நான் உங்கள் கேப்டன். நீங்கள் என் கேப்டன் அல்ல. நான் அரசியலுக்கு வருவேன், பிறகு நான் உங்களுடன் பேசுவேன். நான் தான் உங்களை எப்போதும் வழிநடத்தியுள்ளேன். ஆனால் இப்போது நீங்கள் கடவுளைப் போல செயல்படுகிறார்கள்” என்று மியான்தத் கூறினார்.

“ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் அல்லது பாகிஸ்தானில் உள்ள வேறு எந்த பல்கலைக்கழகத்திற்கும் யாரும் செல்லவில்லை என்பது போல, இந்த நாட்டில் நீங்கள் மட்டுமே புத்திசாலி நபர் என்பது போலவே இருக்கிறீர்கள். மக்களைப் பற்றி சிந்தியுங்கள்.

நீங்கள் நாட்டைப் பற்றி கவலைப்படவில்லை. நீங்கள் என் வீட்டிற்கு வந்து, ஒரு பிரதமராக வெளியே சென்றீர்கள். இதை மறுக்க நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.” என மேலும் கூறினார்.

வீடியோவின் முடிவில், மியான்தத் பலரின் குரலை தான் எதிரொலிப்பதாகக் கூறினார். மேலும் அவர் தான் இம்ரான் கானை பாகிஸ்தானின் பிரதமராக்கினார் என்றும் கூறினார்.

“ஒரு பாகிஸ்தானியராக இருப்பதன் அர்த்தம் என்ன? வாழவும் வாழவைக்கவும் தானே. பாகிஸ்தானியர்களை உங்கள் சொந்தமாக கருதி உதவுங்கள். புத்திசாலித்தனமாக இருங்கள். நான் நாட்டின் குரலையே எதிரொலித்தேன். பொது மக்கள் குரல் எழுப்புவது கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒரு நிலையில் இருக்கிறேன் என்பதால் உலகத்தின் முன்னால் நான் அவர்களின் குரலை உயர்த்த முடியும்.” என்று மியான்தத் மேலும் கூறினார்.

Views: - 36

0

0