கிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..!!!

Author: Babu
27 January 2021, 2:02 pm
nattu - india team - updatenews360
Quick Share

ஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் ஐசிசியின் சார்பில் ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த முறையை மாற்றி, இனி மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில வீரர்கள் ஒரு சில மாதங்கள் நன்கு சிறப்பாக விளையாடிய நிலையில், காயம் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக மேற்கொண்டு விளையாடாத நிலை ஏற்படும்.

இதுபோன்ற பாதிப்புகளை வீரர்கள் சந்திக்காமல் இருக்க, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வழங்கப்படும்
மாதந்தோறும் சிறந்த வீரர்களுக்கு விருதை கிரிக்கெட்டிலும் வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Views: - 66

0

0