டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியீடு : அக்.,24ம் தேதி தரமான சம்பவம்… நீண்ட மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா..!!
Author: Babu Lakshmanan17 August 2021, 4:33 pm
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஓமன் ஆகிய மைதானங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. அதில் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 10-ம் தேதி அபுதாபியில் முதல் அரையிறுதி போட்டியும், 11ம் தேதி துபாயில் 2-வது அரையிறுதி போட்டியும் நடக்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் 14-ம் தேதி துபாயில் நடக்கிறது.
மேலும், குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி அக்டோபர் 24-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. அக்.,31ம் தேதி நடக்கும் 2வது போட்டியில் நியூசிலாந்தையும், அபுதாபியில் நவம்பர் 3-ம் தேதி நடக்கும் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானையும் எதிர்த்து இந்திய அணி மோத இருக்கிறது.
நவம்பர் 5-ம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8-ம் தேதி ஏ பிரிவில் 2-ம் இடம் பெற்ற அணியுடனும் மோதுகிறது. நவம்பர் 8ம் தேதி ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகளின் விபரம் : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள அணிகளின் விபரம் : இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து
0
0