நொந்து போன நெதர்லாந்து… டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அசத்தல்..!!!

Author: Babu Lakshmanan
18 October 2021, 7:31 pm
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து எளிதில் வீழ்த்தியது

டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்றைய நாள் ஆட்டத்தின் போது, நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு ஓடவ் மட்டும் (51) சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரனில் ஆட்டமிழந்தனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் நெதர்லாந்து அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணிக்கு, ஸ்டிர்லிங் (30), டிலேனி (44) சிறப்பாக ஆட, 16வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது.

Views: - 494

0

0