உண்மையில் தொடர் நாயகன் விருது இவருக்கு தான் கொடுக்கணும்: படுகலாய் கலாய்த்த நெட்டிசன்கள்!

19 January 2021, 10:32 pm
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை பிஸியோவிற்கு வழங்கவேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் படுமோசமாகக் கலாய்த்து வருகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 1988க்குப்பின் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி வீரர்கள் காயத்தால் அடுத்தடுத்து வெளியேறிய சூழ்நிலையிலும் கைப்பற்றியுள்ளனர்.

பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாகக் கடந்த 1988 இல் விவ் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி சுமார் 32 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியை மேலும் சிறப்பான தாக்கியது எதுவென்றால் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வெளியேறிய மிகவும் கடினமான சூழ்நிலையில் வென்றதால் தான். தவிர, கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு இந்த தொடரை இந்திய அணி வீரர்கள் வென்றுள்ளனர். இது இந்த தொடர் வெற்றியை மேலும் சிறப்பான தாக்கியுள்ளது.

இதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 89 ரன்கள் அடித்து இந்திய அணி தொடரைக் கைப்பற்ற மிகவும் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் இந்திய அணி தனது பிரதான பவுலர்கள் இல்லாமலேயே அனுபவமற்ற இளம் வீரர்களைக் கொண்டே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதைப் போட்டியின் போது வீரர்கள் காயமடைந்து வலியால் துடித்த போது கிலோமீட்டர் கணக்கில் ஓடிய இந்திய பிஸியோவிற்கு தான் வழங்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் படுமோசமாகக் கலாய்த்து வருகின்றனர். இனி வீரர்கள் காயமடைவதைத் தவிர்க்க பிசிசிஐ முறையான திட்டமிட்டு வீரர்களுக்குச் சரியான ஓய்வு வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பட்டு தொடரைக் கைப்பற்றியதால் அவர்களுக்குக் கூடுதலாக 5 கோடி போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறப்பான வெற்றிக்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் இந்திய அணி வீரர்களைப் பாராட்டியுள்ளார்.

Views: - 0

0

0