ஆஸ்திரேலிய அணி கனவில் பெரிய கல்லைப்போடக் காத்திருக்கும் மழை: காபா டெஸ்ட் அவ்வளவு தானா?

18 January 2021, 7:55 pm
Aus Test Rain - Updatenews360
Quick Share

காபா டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் ஆஸ்திரேலிய அணியின் கனவு மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் இந்த நான்காவது நாள் ஆட்டத்தின்போது கடைசி நேரப் பகுதியில் மழை குறுக்கிட்டதால் இந்திய அணி 2 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நாளை ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றிக்காகத் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இதற்கிடையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. பிரிஸ்பேனில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களில் மழை வர வெறும் 50% வாய்ப்பு மட்டும் உள்ளதாக வானிலை அறிக்கை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போல மழை போட்டியின் நடுவே குறுக்கிட்டது.

இதற்கிடையில் நாளைய கடைசி நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளைய ஆட்டத்தின்போது மதியம் ஒரு மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய சுமார் 51% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய அணியினர் கோப்பையை வெல்ல வேகமாக விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையிலும், ஆஸ்திரேலிய அணி தொடரை வசப்படுத்திக் கொள்ள விரைவாக இந்திய பேட்ஸ்மேன்களை அவுட்டாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டி போட்டி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆயிரத்து 1988 முதல் இந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை தோல்வியைச் சந்தித்தது கிடையாது. இந்த வரலாற்றை இந்திய அணி தகர்க்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 5

0

0