150 ரன்னுக்கு சுருண்ட வங்கதேசம்… 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ; கேப்டன் கேஎல் ராகுல் போட்ட திட்டம் பழிக்குமா..?

Author: Babu Lakshmanan
16 December 2022, 10:44 am
Quick Share

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி வருகிறது.

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் (டிச.,14) தொடங்கியது. புஜாரா, ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் அஸ்வினின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால், 2வது ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் தொடங்கியதும் வெறும் 17 ரன்கள் மட்டும் எடுத்து, 150 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், சிராஜ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஃபாலோ ஆனை தவிர்க்க வங்கதேசத்திற்கு இன்னும் 50 ரன்னுக்கும் மேலாக தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல், 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

Views: - 851

0

1